பராமரிப்பு பணி: பாலக்காடு - திருச்சி ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

3 days ago 5

திருச்சி,

சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள கோவை மற்றும் போத்தனூர் பிரிவுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16844) வருகிற 10, 11, 12, 13, 14, 15-ந்தேதிகளில் காலை 6.30 மணிக்கு புறப்படும் ரெயில் கோவை ஜங்ஷன், கோவை வடக்கு மற்றும் பீளமேடு வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையில் போத்தனூர் மற்றும் இருகூர் வழியாக திருச்சிக்கு வந்தடைகிறது.மேலும் மதுரை ரெயில்வே கோட்டத்தில் உள்ள புங்குடி யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதன்படி செங்கோட்டையில் இருந்த காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16848) நாளை (வெள்ளிக்கிழமை) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை ஜங்ஷன், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, மணப்பாறை வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையில் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு சென்றடைகிறது.

கோடைகால சிறப்பு ரெயில்

இதேபோல், கன்னியாகுமரியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - சார்லபள்ளி கோடைக்கால சிறப்பு ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை ஜங்ஷன், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Read Entire Article