சென்னை,
சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை வடக்கு ரெயில்வே யாா்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் குறிப்பிட்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்ட இருந்தது. இதைதொடர்ந்து தொழில்நுட்ப காரணங்களால் ரெயில் சேவையில் மாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம்-போத்தனூர் (வண்டி எண்.66611) ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று அட்டவணைபடி இயக்கப்படும். மேட்டுப்பாளையம்-கோவை (66613) ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு இயக்கப்படும். கோவை-மேட்டுப்பாளையம் (66614) ரெயில் கோவையிலிருந்து 11.50 மணிக்கு இயக்கப்படும்.
ஆலப்புழா-தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் இன்று போத்தனூா்-இருகூர் வழியாக திருப்பிவிடப்படாது. இந்த ரெயில் அட்டவணைப்படி கோவை வழியே இயக்கப்படும். எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்.பெங்களூரு (12678) எக்ஸ்பிரஸ் இன்று போத்தனூர்-இருகூர் வழியாக திருப்பி விடப்படாது. அட்டவணைப்படி கோவை வழியே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.