பராமரிப்பு பணி: 8 ரெயில்களின் சேவையில் மாற்றம்

4 hours ago 2

சென்னை,

திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66045) வருகிற 1-ந்தேதி முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.

அதுபோல் விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் (வண்டி எண் 66046) 1-ந்தேதியன்று விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்படும்.

மேலும் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி மதியம் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண் 66019) 30 நிமிடங்கள் தாமதமாக மாலை 3.05 மணிக்கு புறப்படும். அதுபோல் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 66063), புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும். புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66064) வருகிற 1, 3, 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் எழும்பூர்- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22675) 2, 3, 4 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் சுமார் 15 நிமிடங்களும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 66051), குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16128) 1-ந்தேதி வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article