பராமரிப்பு பணி: 2 பயணிகள் ரெயில்கள் பகுதியாக ரத்து

2 days ago 2

சென்னை,

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் யார்டில் தண்டவாள பராமரிப்பு தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் பெங்களூரு பயணிகள் ரெயில் மற்றும் ஈரோடு பயணிகள் ரெயில் ஆகிய 2 ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் இன்று (9-ந் தேதி), 11, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ரெயில் எண் 56108/56107 ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை செல்லும் பயணிகள் ரெயில் திருப்பத்தூர் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. அதே ரெயில் மீண்டும் திருப்பத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து ஈரோடு வரை இயக்கப்படுகிறது. இதனால் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ரெயில் எண் 66550/66549 ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பயணிகள் ரெயிலானது பெங்களூருவில் இருந்து சோமநாயக்கன்பட்டி ெரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. அதே ரெயில் மீண்டும் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படுகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article