பரவை கிராமத்தில் நூலகத்தை இடித்து அகற்றி வணிக வளாகம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதிப்பு

3 months ago 14

மதுரை: பரவை கிராமத்தில் நூலகத்தை இடித்து அகற்றி வணிக வளாகம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வணிக வளாக கட்டுமானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனு குறித்து மதுரை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பரவை கிராமத்தில் உள்ள பொது மந்தை திடல் அருகே கலை அரங்கம், பொது வாசகர் நூலகமாக உள்ளது என மனு தாக்கல் செய்துள்ளார். புதிய வாசக சாலை அமைக்க உள்ளதாகக் கூறி சில தனி நபர்கள் வணிக வளாகம் கட்டி வருவதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். நூலகத்தை இடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது எனக் கூறிய நீதிபதி, கட்டுமானத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

The post பரவை கிராமத்தில் நூலகத்தை இடித்து அகற்றி வணிக வளாகம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article