மதுரை, டிச. 11: மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி ஒருங்கிணைப்பு சங்கத்தின் மேலாளராக இருப்பவர் கண்ணன். இவரது பிளாக்கில் கட்டுமானப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு தேவைப்படும் இரும்புக்கம்பிகளை அவர் அதிகளவில் வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில், ஊமச்சிகுளத்தை சேர்ந்த யுவராஜா(21), ஜவகர்(21), வாடிப்பட்டி மருதராஜ்(24), தங்கப்பாண்டி(21), 18 வயதுடைய வாலிபர் ஆகியோர் அந்த இரும்புகளை சிறிது சிறிதாக திருடி, மினி சரக்கு வேனில் ஏற்றிச்சென்று பழைய இரும்புக்கடையில் விற்று வந்ததாகத் தெரிகிறது.
இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். மேலும் உள்ள அனைத்து கம்பிகளையும் இது போலவே விற்று விட வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தை பரவை மார்க்கெட்டிற்கு அடிக்கடி சரக்கு இறக்கி ஏற்றிச்செல்ல வரும் டிரைவர் ராஜரத்தினம், கண்ணனிடம் தெரிவித்துள்ளார். அவர் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 5 பேரையும் கைது செய்தனர்.
The post பரவை காய்கறி மார்க்கெட்டில் ரூ.20ஆயிரம் மதிப்பிலான இரும்புகள் திருடிய 5 பேர் கைது appeared first on Dinakaran.