"பரமசிவன் பாத்திமா" படத்தின் இசை வெளியீடு அப்டேட்

2 hours ago 3

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் மற்றும் 'சார்' என்ற திரைபடமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தனது 34-வது படமான 'பரமசிவன் பாத்திமா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை 'தமிழ்க்குடிமகன்' என்ற திரைப்படத்தை இயக்கி பாராட்டுக்களை பெற்ற இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து கதாநாயகியாக சாயாதேவி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசும் வகையில் உருவாகி வருகிறது. 'பரமசிவன் பாத்திமா' படத்தின் டிரெய்லரை நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இணைந்து தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் முதல் பாடலான 'நான் மல்லி' பாடலின் வீடியோ வெளியாகி வைரலானது.. இப்பாடலை ஏகாதேசி வரிகளில் பிரியா ஹமேஷ் பாடியுள்ளார். இப்பாடலில் கூல் சுரேஷ் நடனமாடிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'பரமசிவன் பாத்திமா' படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

#ParamasivanFathima Audio drops Tomorrow! #ParamasivanFathimaAudioFromTomorrow In Theatres from June 06th! Starring @ActorVemal #Chayadevi Produced & Directed by @LCMOVIES_2006 @director_esakkiMusic by @Deepan_Composer #Vemal34 @seshvitha_raju #MSBhaskar #CoolSuresh pic.twitter.com/le7KsnVp8h

— director esakki (@director_esakki) May 25, 2025
Read Entire Article