பரமக்குடியில் வஉசி சிலைக்கு மரியாதை

1 month ago 5

பரமக்குடி,நவ.19: பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் வஉசி சிலைக்கு நினைவு நாளையொட்டி பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரத்தின் 88வது நினைவு நாள் குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டது. தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் முருகேசன், மில்கா செந்தில், செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் குமரேசன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில், காட்டுப்பரமக்குடியில் உள்ள வ.உ.சி சிலைக்கு சபையின் நிறுவனர் கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post பரமக்குடியில் வஉசி சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article