பயணிகள் பலருக்கும் தெரியாத செய்தி: கடைசி நேரத்தில் டி ரிசர்வ் டிக்கெட் மூலம் ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்; தெற்கு ரயில்வே தகவல்

4 hours ago 3

* 19 தெற்கு ரயில்வேயில் டி-ரிசர்வ் டிக்கெட் வசதி உள்ள ரயில்கள்

ரயில்களில் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட் என்பது போல, டி-ரிசர்வ் டிக்கெட் மூலமாகவும் ரயில்களில் பயணிக்கலாம் என்று வசதி ஒன்று உள்ளது. அதுவும் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது புதிய நடைமுறை இல்லை..ஆனாலும் இது பற்றி பயணிகள் பலருக்கும் இன்னும் தெரியாமலே உள்ளது. பயணிகள் ஊருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, தொலைதூரம் செல்வதாக இருந்தாலும் சரி, முதலில் ரயில் பயணத்தைதான் விரும்புவார்கள். ஏனென்றால் பயண களைப்பு தெரியாது. குடும்பத்தினர், உறவினர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பேசி கொண்டே ரயிலில் முன்பதிவு செய்துகொண்டு பயணிக்கவே விரும்புகின்றனர். இதேபோல் கழிவறை வசதியும் ரயில் போக்குவரத்தில் மட்டுமே இருக்கிறது. எனினும் பண்டிகை உள்ளிட்ட காலங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக முன்பதிவு ரயில் பெட்டிகளில் முன் கூட்டியே இடங்கள் நிரம்பி விடுகின்றன. அன்ரிசர்வ்டு எனப்படும் முன்பதிவில்லா பெட்டியிலும் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. இதற்கும் தீர்வை காண ரயில்வே முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், ரயில்களில் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட் என்பது போல, டி-ரிசர்வ் டிக்கெட் மூலமாகவும் ரயில்களில் பயணிக்கலாம் என்று வசதி ஒன்று உள்ளது. அதுவும் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, ரிசர்வ்டு, அன்ரிசர்வ்டு பெட்டிகளில் இந்த டி ரிசர்வ் டிக்கெட் எடுத்த பயணிகள் பயணிக்கலாம். இந்த டி ரிசர்வ்டு டிக்கெட் நீண்ட நாட்களாக நடைமுறையில்தான் இருக்கிறது. ஆனால் இதுபற்றி பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. டிக்கெட் கவுண்டர்களில் மட்டுமே இந்த டிக்கெட்டை எடுக்க முடியும்.

பயணிகள் டி ரிசர்வ்டு டிக்கெட் என்று கேட்டு டிக்கெட் எடுக்க வேண்டும். அதாவது முன்பதிவு செய்த பயணிகள் படுக்கை, இருக்கை பெட்டிகளில் பயணம் செய்ய முடியும். ஆனால் டி ரிசர்வ்டு டிக்கெட்டுகளை எடுத்தவர்கள் இந்த இரண்டு பெட்டிகளிலும் பயணம் செய்ய முடியும். குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை எடுத்துக் கொண்டால், நெல்லையில் இருந்து சென்னை வரை ஒருவர் படுக்கை பெட்டியில் டிக்கெட் புக் செய்திருந்தால், நெல்லையில் இருந்து கொல்லம் வரை அந்த இடம் காலியாகவே இருக்கும். ஏன், அப்படி அந்த இருக்கை மற்றும் படுக்கையை காலியாக கொல்லம் வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அந்த இருக்கை வசதியை நெல்லையில் இருந்து கொல்லம் செல்லும் ஒரு பயணி பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கும் வகையில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலானது கொல்லத்தில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வழியாக நெல்லை வந்து சென்னை செல்கிறது. இந்த ரயிலில் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தால், கொல்லத்தில் இருந்து நெல்லை வரை அந்த படுக்கை காலியாகவே இருக்கும். எனவே கொல்லம், திருவனந்தபுரத்தில் இருந்து இந்த டிக்கெட்டை டி ரிசர்வ்டு டிக்கெட்டாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணி கூடுதல் கட்டணம் செலுத்தினாலும் முன்பதிவில்லா பெட்டியில் நெரிசலோடு பயணிப்பதை தவிர்க்க முடியும். இந்த சேவையை முன்பதிவு டிக்கெட் போன்று முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாது. அதேபோன்று 3 மணி நேரம் வரை பயன்படுத்தும் வகையிலான முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பது போன்று 3 மணி நேரத்துக்கு முன்பாகவும் எடுக்க முடியாது.

ரயிலானது, சம்பந்தப்பட்ட ஸ்டேஷனில் இருந்து புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே இந்த டிக்கெட்டை பெற முடியும். அதுவும், டிக்கெட் கவுண்ட்டர்களில் மட்டுமே இந்த டிக்கெட்டுகளை பெற முடியும். ‘டி-ரிசர்வ்டு’ பெட்டிக்கான டிக்கெட் என கேட்டு பயணிகள் வாங்க முடியும். படுக்கை காலி இல்லை எனில் வழங்கப்பட வாய்ப்பு இல்லை. இந்த டிக்கெட்டுக்கான கட்டணத்தை பொறுத்தமட்டில், ஒவ்வொரு ரயிலுக்கான படுக்கை வசதி பெட்டிகளின் கட்டண அடிப்படையில் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் பயணம் என்பதை கணக்கிட்டு நிர்ணயிக்கப்படும். இந்த வசதி மூலமாக அதிகபட்சமாக, 100 கிலோ மீட்டருக்குள் பயணம் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. டிக்கெட் பெற்றவர்கள் ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டிகளில் இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணிக்க முடியும். இது புதிய நடைமுறை இல்லை..ஆனாலும் இது பற்றி பயணிகள் பலருக்கும் இன்னும் தெரியாமலே உள்ளது.

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் 35 ரயில்களில் ‘டி-ரிசர்வ்டு’ படுக்கை வசதி பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த திட்டத்தை விரைவில் 3ம் வகுப்பு ஏ.சி.பெட்டிக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எந்தெந்த ரயில்களில் இந்த வசதி உள்ளன?
* சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு ரயிலில், நெல்லை – கொல்லம் வரை 2 பெட்டியில் இந்த டி ரிசர்வ்டு வசதி உள்ளன.
* சென்னை சென்ட்ரல் – மங்களூர் ரயிலில், சென்ட்ரல்- சேலம் வரையில் 1 பெட்டி உள்ளன.
* எழும்பூர்-ராமேஸ்வரம் ரயிலில், மானாமதுரை-ராமேஸ்வரம் வரை 2 பெட்டிகளில் இந்த வசதி உள்ளன
* எழும்பூர் – மங்களூர் ரயிலில், திருச்சி – மங்களூர் வரையில் ஒரு பெட்டி உள்ளன.

* கன்னியாகுமரி – பெங்களூர் ரயிலில், கன்னியாகுமரி -பாலக்காடு வரையிலும் கன்னியாகுமரி -எர்ணாகுளம் வரையிலும் தலா ஒரு பெட்டியில் இந்த வசதி உள்ளன.
* தூத்துக்குடி – மைசூர் ரயிலில், தூத்துக்குடி – மதுரை வரை 2 பெட்டிகள் உள்ளன.
* திருவனந்தபுரம்-செகந்திரபாத் ரயிலில், திருவனந்தபுரம் முதல் கோவை வரை 2 பெட்டிகள் உள்ளன.
* சென்னை சென்ட்ரல் -நாகர்கோவில் ரயிலில் நெல்லை- நாகர்கோவில் வரை,
* குரூவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நகர்கோவில் -நெல்லை, நெல்லை – நாகர்கோவில் வரை இந்த வசதி உள்ளது.

The post பயணிகள் பலருக்கும் தெரியாத செய்தி: கடைசி நேரத்தில் டி ரிசர்வ் டிக்கெட் மூலம் ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்; தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article