பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சௌகரியமான பயணத்தை உறுதிப்படுத்தவும் 2 ரயில்களுக்கு LHB பெட்டிகள்: தென்னக ரயில்வே அறிவிப்பு

3 hours ago 3

சென்னை: பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சௌகரியமான பயணத்தை உறுதிப்படுத்தவும், பின்வரும் ரயில்களின் LHB பெட்டிகளாக மாற்றப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதில்,
ரயில் எண் 22616/22615 கோயம்புத்தூர் – திருப்பதி – கோயம்புத்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 20 மார்ச் 2025 முதல் கோயம்புத்தூர் மற்றும் திருப்பதியில் இருந்து LHB பெட்டிகளுடன் இயக்கப்படும்.ரயில் எண் 22617/22618 திருப்பதி – SMVT பெங்களூரு – திருப்பதி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும்), 21 மார்ச் 2025 முதல் திருப்பதியில் இருந்தும், 22 மார்ச் 2025 முதல் SMVT பெங்களூருவில் இருந்தும் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும்.

LHB பெட்டிகள் அமைப்பு ரயில் எண் 22616/22615 கோயம்புத்தூர் – திருப்பதி – கோயம்புத்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண் 22617/22618 திருப்பதி – SMVT பெங்களூரு – திருப்பதி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பெட்டி அமைப்பு பின்வருமாறு மாற்றியமைக்கப்படும். 1- ஏசி நாற்காலி பெட்டி, 9- இரண்டாம் வகுப்பு நாற்காலி பெட்டிகள், 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு பெட்டி (மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏற்ற வடிவமைப்பு), மற்றும் 1 பொருட்கள் வைக்கும் பெட்டியுடன் ஒருங்கிணைந்த பிரேக் வேன். இவ்வாறு தெரிவித்துள்ளது.

 

The post பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சௌகரியமான பயணத்தை உறுதிப்படுத்தவும் 2 ரயில்களுக்கு LHB பெட்டிகள்: தென்னக ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article