பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு - பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பேட்டி

11 hours ago 3

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், சமீபத்தில் அளித்த பேட்டியில், பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்தது என்றும், நிதி உதவி அளித்தது உண்மை என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல்  பூட்டோ (35) அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தான் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்தது என்பதில் ரகசியம் எதுவும் கிடையாது. அந்த தொடர்பின் காரணமாக பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்டதால் நாங்கள் பாடங்களை கற்றுக்கொண்டோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண சீர்திருத்தம் செய்தோம். பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு என்றார். பிலாவல் பூட்டோ சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article