பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு சபரிமலை பக்தர்கள் சென்ற KSRTC பேருந்து மீது மரம் விழுந்தது. பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து பம்பையில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் பேருந்து மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி மாற்றுப் பேருந்து மூலம் பக்தர்களை அனுப்பி வைத்தனர்.
The post பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு சபரிமலை பக்தர்கள் சென்ற KSRTC பேருந்து மீது மரம் விழுந்தது. appeared first on Dinakaran.