பன்னிரு கரங்களுடன் மயில் மீது ஆறுமுகப் பெருமான்

6 months ago 21

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. வக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்தத் தலம் வக்கரை என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். இந்தச் சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப் பெருமானாக, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை உள்ளனர்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம் இதுவாகும். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இந்த தலத்தில் உள்ள முருகப் பெருமானை போற்றியுள்ளார். அந்தத் திருப்புகழைப் பாடி இத்தல முருகனை வணங்கினால், நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். 

Read Entire Article