'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் வெளியானது

5 hours ago 3

சென்னை,

பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்திற்கு 'பன் பட்டர் ஜாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரெயின் ஆப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் போருக்கு மத்தியில் ராஜு பன் பட்டர் ஜாம் சாப்பிடும் படியான காட்சி இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்தநிலையில் தற்போது 'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Presenting the hilarious teaser of #BunButterJam !Watch and get Buckled up for an Gen-Z vibe#BunButterJamTeaser https://t.co/6lRJzTShpuA @nivaskprasanna MusicalWritten & Directed by @RMirdathProduced by @RainofarrowsENT @sureshs1202#BBJ #பன்பட்டர்ஜாம்pic.twitter.com/HLEXn8ginC

— Rain Of Arrows Entertainment (@RainofarrowsENT) December 21, 2024
Read Entire Article