சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தவர் ஆதவ் அர்ஜுனா. கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச்செயலாளராக உள்ள நிர்மல் குமாரும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்துள்ளார். நிர்மல் குமாரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல் குமாரும் தவெக தலைவர் விஜய் முன்னையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.