கெங்கவல்லி, ஜூலை 7: கெங்கவல்லி பேரூராட்சி 10வது வார்டு உட்பட்ட பனங்காடு, வசந்தபுரம், கணேசபுரம் பகுதிகளில் சுவேதா நதிக்கரையில் நீரோடை ஓரமாக ஏராளமான பனைமரங்கள் உள்ளன. இந்நிலையில், மர்ம நபர்கள் தொடர்ந்து பனமரங்களை வெட்டி வருகின்றனர். கடந்த வாரம் ஒரு பனைமரம் வெட்டி சாயக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியில் 10க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி கடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post பனைமரம் வெட்டி கடத்திய கும்பல் appeared first on Dinakaran.