பனிமூட்டம் காரணமாக சென்னையில் 14 விமானங்கள் தாமதம்

1 week ago 3

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக, 10 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் தாமதமாகின. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக காலை நேரத்தில் அடர் பனிமூட்டமும், பகலில் கடுமையான வெயிலுமாக பருவநிலை மாறி மாறி இருந்து வருகிறது. இப் பனிமூட்டம் காரணமாக, காலை நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலையிலும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான சிங்கப்பூர், துபாய், பக்ரைன், அபுதாபி, மஸ்கட், கொல்கத்தா, சூரத், விஜயவாடா, புவனேஸ்வர், அந்தமான் ஆகிய 10 புறப்பாடு விமானங்கள், அதேபோல் மஸ்கட், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post பனிமூட்டம் காரணமாக சென்னையில் 14 விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.

Read Entire Article