ஊட்டி, பிப்.23: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை கடும் பனிப்பொழிவு காணப்படும். இந்த பனிப்பொழிவின் போது, தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் ஊட்டியை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்கள் பாதிக்கும். இச்சமயங்களில் தேயிலை செடிகள் பனியால் கருகி காய்ந்து போய்விடும்.
அதன்பின், மழை பெய்யும் ஜூன் மாதம் வரை தேயிலை மகசூல் குறைந்து காணப்படும். இச்சமயங்களில் சிலர் தேயிலை செடிகளை கவாத்து செய்து தோட்டங்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வார்கள். இம்முறையும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால், தேயிலை தோட்டங்கள் பாதிக்கப்பட்டன.
பனியால் பாதிக்கப்பட்ட தேயிலை தோட்டங்களில் ஒரு சிலர் கவாத்து செய்து, அவைகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை செடிகளை நோய் தாக்காத வகையில் சுண்ணாம்பு தேய்த்தல், உரமிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மழை பெய்தால், தண்ணீர் தேங்கும் வகையில் செடிகளின் நடுவே, கால்வாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post பனிக்காலம் முடிந்த நிலையில் தேயிலை தோட்டம் பராமரிக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.