தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு – 5
பூண்டு – 3 பல்
ப.மிளகாய் – காரத்திற்கேற்ப
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
தாளிக்க:
கறிவேப்பிலை, எண்ணெய்- அரை டீஸ்பூன்
செய்முறை:
ப.மிளகாய், பூண்டு, சீரகத்தை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.பனங்கிழங்கு தோல் நீக்கி வேகவைத்து கொள்ளவும். கிழங்கு வெந்ததும் நாரை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய பனங்கிழங்கு துண்டுகளை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. உதிரி உதிரியாக வரும்படி பொடித்துக்கொள்ளவும். (கிராமப்புறங்களில் பனங்கிழங்கை வேக வைத்து பின்னர் காய வைத்து செய்வார்கள்)கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அரைத்து வைத்த ப.மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.பச்சை வாசனை போனவுடன் அதில் உதிரியாக பொடித்து வைத்த பனங்கிழங்கை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கிளற வேண்டும். உதிரி உதிரியாக வரும் போது இறக்கி பரிமாறவும்.
The post பனங்கிழங்கு புட்டு appeared first on Dinakaran.