பந்தலூர் அருகே தேயிலை தோட்ட குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

1 week ago 4


பந்தலூர்: பந்தலூர் வட்டம், பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட நெலாக்கோட்டை அருகே ராக்வுட் தனியார் தேயிலை தோட்ட மேலாளர் குடியிருப்புக்குள் நேற்று மதியம் ஒற்றை காட்டு யானை புகுந்தது. பின்னர், யானை பூந்தோட்டத்தில் உள்ள பூ செடிகள் மற்றும் மரங்களை உடைத்தும், மிதித்தும் சேதப்படுத்தியது. அக்கம் பக்கத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டு யானையை துரத்தினர். சிறிது நேரம் அப்பகுதியில் உலா வந்த யானை, அதன்பின் அங்கிருந்த கம்பி வேலியை தும்பிக்கையில் விளக்கி சாதுரியமாக கடந்து சென்றது.

தொடர்ந்து நெலாக்கோட்டை, முக்கட்டி, ராக்வுட், குந்தலாடி, ஓர்கடவு, பாக்கனா உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் இரவும், பகலும் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். ஒற்றை காட்டு யானையால் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் அருகே தேயிலை தோட்ட குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article