பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து 2 காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம்

2 months ago 10

பந்தலூர்: பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து உலா வந்த 2 காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் உலா வருவதுடன் வீடுகளை சேதப்படுத்தி பொதுமக்கள் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு திருவள்ளுவர் நகர் பகுதியில் நேற்றிரவு புகுந்த 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. இதுஅப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானைகளை ரோந்து வாகனம் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் குடியிருப்புகளின் அருகே யானைகளின் நடமாட்டம் காணப்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து 2 காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article