பத்ம பூஷண் விருது பெறும் நடிகர் அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

5 months ago 15

சென்னை: பத்ம பூஷண் விருது பெறும் நடிகரும், ரேசருமான அஜித்குமாருக்கு வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.

இதைத்தொடர்ந்து, 2025-ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளை ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி, நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும், சினிமா பிரபலங்களும் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை விமானநிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த், அஜித்துக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

 

The post பத்ம பூஷண் விருது பெறும் நடிகர் அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து! appeared first on Dinakaran.

Read Entire Article