பண்ருட்டி கெடிலம் ஆற்றில் தாயுடன் துணி துவைக்க சென்ற 12 வயது சிறுமி பரிதாப பலி

1 month ago 5

*சோகத்தில் மூழ்கிய கிராமம்

பண்ருட்டி : பண்ருட்டி, புதுப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செம்மேடு, ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார்-இசைமொழி தம்பதியினரின் மகள் சைனிஸ்ரீ (12). இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இசைமொழி துணி துவைப்பதற்காக செம்மேடு கெடிலம் ஆற்றுக்கு சென்றார். அவருடன் சைனிஸ்ரீயும் உடன் சென்றுள்ளார். அங்கு ஆற்றின் கரையில் சிறுமி சைனிஸ்ரீ குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் அலறியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் நீரில் மூழ்கிய சிறுமியை தேடினர். தீவிர தேடுதலுக்கு பிறகு சிறுமி சைனிஸ்ரீயை இறந்த நிலையில் மீட்டனர். இதனை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த சிறுமியின் உறவினர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆற்றிறில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பண்ருட்டி கெடிலம் ஆற்றில் தாயுடன் துணி துவைக்க சென்ற 12 வயது சிறுமி பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article