பண்ணைக்குள் புகுந்து கோழிகளை கடித்த தெருநாய்கள்: 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு

4 hours ago 3

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுண்டபாடி குட்டிபாளையத்தில் கோழி பண்ணைக்குள் புகுந்து தெரு நாய்கள் கடிதத்தில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அங்குள்ள விவசாயிகள் ஆடுகள், மாடுகள், கோழி போன்ற கால்நடை வளர்ப்பதை முக்கிய தொழிலாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கோபி அருகே கவுண்டபாடி பகுதியில் குட்டிபாளையம் என்ற கிராமத்தில் சோமசுந்தரம் என்ற விவசாயி கடந்த 15 ஆண்டுகளாக அவருடைய விவசாய தோட்டத்தில் பண்ணை அமைத்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகளை வளர்த்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல கோழிகளுக்கு தீவினம் வைத்துவிட்டு சென்ற சோமசுந்தரம் இன்று காலை வந்து பார்த்தபோது அந்த பண்ணைக்குள் கோழிகளை பிரித்து வைத்திருந்த அறைகளில் புகுந்த சுமார் 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள். அங்கிருந்த 110 கோழிகளையும் கடித்து கொன்றுள்ளது. இதனால் சுமார் 40 ஆயிரம் முதல் 50 உயிரம் வரை இழப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே கவுண்டபாடி அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஐயம்பாளையம் என்ற கிராமத்தில் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறியது. இது தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து கால்நடைகளை தெருநாய்கள் கொன்று வருகிறது . இன்று காலை சென்னிமலை அடுத்த ஆலமலை என்ற கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கொட்டகையில் வளர்ந்திருந்த 20க்கும் மேற்பட்ட ஆடுகளை துரத்தி வேட்டையாடுகிற சிசிடிவி காட்சிகள் வெளியாகி விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள சூழ்நிலையில்,தெருநாய்களுக்கு போதிய உணவு இல்லாத சுழலில் இது போன்ற விவசாயிகள் வளர்க்கக்கூடிய ஆடு கொட்டகைகள், கோழிப்பண்ணைகள் உள்ள ஆடு, கோழிகளை கடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு கடித்திருக்கலாம் என்று எண்ணப்பட்ட நிலையில் இதனை தெருநாய்கள் கடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இத்தகைய நிலையில் தெருநாய்களை கட்டுப்படுத்துவதை விவசாயிகள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.

The post பண்ணைக்குள் புகுந்து கோழிகளை கடித்த தெருநாய்கள்: 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article