பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது கார் மோதி விபத்து .!

2 months ago 13
சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அழகு குமார் என்பவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாபு என்பவர் ஓட்டி வந்த கார் , கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை இடித்தது. இதில் காயமடைந்த காவலர் அழகு குமார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கார் ஓட்டி வந்த பாபுவை கைது செய்தனர்.
Read Entire Article