பணியின்போது உயிர் நீத்த 213 காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால், கமிஷனர் அருண் மலர் அஞ்சலி: 126 குண்டுகள் முழங்க மரியாதை

4 months ago 13

சென்னை: நாடு முழுவதும் பணியின் போது உயிர் நீத்த 213 காவலர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள நினைவு தூண் முன்பு, துப்பாக்கி குண்டுகள் முழங்க டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தனர். இந்தியா – சீனா போரின் போது, கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி திடீரென சீனா நடத்திய தாக்குதலில் 10 ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டுக்காக அவர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி, நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் பல்வேறு பணிகளின்போது உயிர் தியாகம் செய்த 213 காவலர்களை போற்றும் வகையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூண் முன்பு, நேற்று காலை தமிழ்நாடு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில் 126 குண்டுகள் முழங்க தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண், சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் நினைவு தூண் முன்பு அஞ்சலி செலுத்தினர்.

The post பணியின்போது உயிர் நீத்த 213 காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால், கமிஷனர் அருண் மலர் அஞ்சலி: 126 குண்டுகள் முழங்க மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article