பணிபுரியும் பெண்களுக்கான ‘மேக்கப்’ டிப்ஸ் !

3 months ago 12

தங்களை அழகாக வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர்கள் பெண்கள். குறிப்பாக அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நாள் முழுவதும் அழகான தோற்றத்தில் இருக்கவே விரும்புவார்கள். நாள் முழுக்க எப்படி புத்துணர்வுடனும், நல்ல தோற்றத்துடனும் வைத்துக்கொள்ளலாம். இதோ சில ஆலோசனைகள்.

*முதலில் உங்கள் சருமத்தை சுத்தம் செய்ய சருமத்துக்கு ஏற்ற ‘ஃபேஷ்வாஷ்’ பயன்படுத்தவும். வாரம் இருமுறை ஸ்க்ரப் பயன்பாடு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உங்கள் சருமத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டும்.
* அடுத்து காலநிலை எப்படி இருந்தாலும், நீங்கள் உங்கள் சருமத்தை எப்போதும் மாய்சரைஸ் செய்ய வேண்டும். இது உங்கள் சருமத்தை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
* பிரைமர் முக்கியம். இது மேக்கப்புக்கு உங்கள் சருமத்தை தயார் படுத்தும்.
*உங்கள் சருமத்துக்கு ஒவ்வொரு நாளும் ‘சன்ஸ்க்ரீன்’ அவசியம். தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
*முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் இருந்தால், கட்டாயம் ‘கன்சீலர்’ உபயோகிக்க வேண்டும்.
*கண்ணுக்கு ‘மேக்கப்’ போடும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கண் இமைகள் கறுமையாகவும், நீளமாகவும் தோற்றமளிக்க ஐலைனர் மற்றும் மஸ்காரா பயன்படுத்தலாம். ஐலைனரே போதும் என்போர் மஸ்காராவைத் தவிர்க்கலாம்.
*ஒப்பனையின் இறுதிக் கட்டமாக இருப்பது உதட்டு சாயம் பூசுவது. இதை பூசுவதன் மூலம் தான் உங்கள் சருமம் பளிச்சென மின்னும்.
*சில அலுவலகங்களுக்கு என்று ஆடைக் கட்டுப்பாடு இருக்கும். அதற்கு ஏற்ப ஒப்பனை செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.
*சில அலுவலகங்களில் ஆடைக் கட்டுப்பாடு எதுவும் இருக்காது. அங்கு உங்கள் விருப்பம் போல் ஆடை அணிவதோடு, அதற்கு ஏற்ற மேக்கப்பும் செய்து கொள்ளலாம்.
*பொதுவாக ஓவர் மேக்கப், அலுவலகத்துக்கு ஆகாது. அதிலும் அன்றாடம் வெளியாட்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ள பணியில், அதீத ஒப்பனை, கண்களுக்கு உறுத்தலை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக தங்க நகை, பட்டாடைகள் அலுவலகத்தின் சாதாரண நாட்களில் நம்மை படிப்பறிவில்லாதவர்களாக சித்தரிக்கும் நிலை கார்பரேட் அலுவலகங்களில் உண்டு. மறைமுக விமர்சனங்களும் வரலாம். எனவே இதையெல்லாம் மனதில் வைத்து, அலுவலக பெண்மணிகள் மேக்கப் செய்து கொள்வது நல்லது.
*அவர் அப்படி உடையில் வருகிறார், இவர்கள் கிளாமராக வருகிறார்கள் என ஒப்பீடு செய்யாமல், உங்களின் விருப்பம், என்னவோ, உங்களின் எல்லை எதுவோ அதற்கான உடைகளை தேர்வு செய்யுங்கள்.
*மற்றவர்கள் உடைகள், மேக்கப்பில் ஆலோசனைகள் வழங்குவது ஆரோக்கியம். ஆனால் விமர்சனம், எதிர்மறை கருத்துகள் தெரிவிக்காமல் இருப்பதும் கூட நம்மை சற்று கெத்தான பேர்வழியாகக் காட்டும்.
*அடிக்கடி மேக்கப், அடிக்கடி டச்சப் என உங்களது கேபினிலேயே மேக்கப் செய்து கொள்ளாதீர்கள். இது கேலி, கிண்டலை உண்டாக்கும். மதிய உணவு இடைவேளையில் ஒருமுறை பிறகு அலுவலகத்தில் இருந்து ஒருவேளை முக்கிய சந்திப்பிற்காக வெளியில் செல்கிறீர்கள் எனில் அப்போது மட்டும் மேக்கப்டச்சப் செய்துகொள்ளுங்கள். பிறரையும் உறுத்தாது.
– அ.ப.ஜெயபால்

The post பணிபுரியும் பெண்களுக்கான ‘மேக்கப்’ டிப்ஸ் ! appeared first on Dinakaran.

Read Entire Article