பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

1 month ago 7

 

உடன்குடி, மார்ச் 24: குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பசுமை வளாக மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வித்யாதரன் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் அலுவலரும், தமிழாசிரியருமான ராஜகுமார் முன்னிலை வகித்தார். முதுகலை பொருளியல் ஆசிரியர் சுரேஷ் காமராஜ் மரக்கன்றுகளை நட்டினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் ஆசிரியர்கள், மாணவர்கள், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோர் 50 மரக்கன்றுகளை நட்டினர். உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை செயலாளர் முருகன், செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

The post பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளியில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Read Entire Article