பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞரைக் கடத்திய கும்பல்.. விரட்டிச் சென்று மீட்ட போலீசார்..!

5 months ago 34
மேட்டூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக கடத்தப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டனர். மேகநாதன் என்பவர் நடத்திய நிதி நிறுவனத்தில் 22 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருந்த ஆசிரியை பாரதி மேகநாதனிடம் தனது பணத்தைத் திருப்பிக் கேட்டு வந்தார். மேகநாதன் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் 7 பேர் கொண்ட கும்பல் மேட்டூர் நான்கு ரோட்டில் மேகநாதனை அடித்து தாக்கி ஜீப்பில் ஏற்றிச்சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் கடத்தப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் பாரதியின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். தருமபுரி மாவட்டம் வெள்ளக்கல் பகுதியில் பொலிரோ வாகனத்தை போலீசார் விரட்டிச்சென்று முரளி என்பவரை கைது செய்து மேகநாதனை மீட்டனர். ஆசிரியை பாரதி உள்ளிட்ட கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
Read Entire Article