பணம் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் மீது சரமாரித் தாக்கிய உள்ளூர்வாசிகள் - போலீசார் விசாரணை

3 months ago 12
குளித்தலை அருகே வெள்ளப்பட்டி களத்துவீடு பகுதியில் பணம் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் மீது 4 பேர் சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில் சி.சி.டி.வி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நச்சலூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நடத்தி வரும் பெட்ரோல் பங்கில், எங்கள் ஊரில் பெட்ரோல் பங்க் நடத்தும் வெளியூர்வாசி எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகளான சின்னச்சாமி உள்ளிட்ட 4 பேர் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பங்க் ஊழியர் இன்பரசு 500 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு ரசீதில் கையெழுத்திடுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த 4பேரும் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
Read Entire Article