புதுடெல்லி: லக்னோவை சேர்ந்த ஷைன் சிட்டி குழுமம் பொதுமக்களிடம் ரூ.800 முதல் 1000 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி நசீமின் கூட்டாளியாக இருந்த பள்ளி ஆசிரியை சஷி பாலா அமலாக்கத்துறையால் 2023 நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் சஷிபாலா தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு அமலாக்கத்துறையை கடுமையாக விமர்சனம் செய்தனர். சட்டப்பூர்வ விதிவிலக்குகள் சட்டத்தின் கீழ் வெளிப்படையாக வழங்கப்பட்டிருந்தாலும், பணமோசடி வழக்குகளில் கடுமையான ஜாமீன் நிபந்தனைகள் பெண்களுக்குப் பொருந்தும் என்று அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த பதில் மனுவால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள்,’ அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவின் விவரங்கள் சட்டத்திற்கு முரணானது.
இதுபோன்ற வாதங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற நடத்தையையிதட நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஒன்றிய அரசுக்காக ஆஜராகும் நபர்களுக்கு சட்டத்தின் அடிப்படை விதிகள் தெரியவில்லை என்றால், அவர்கள் ஏன் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும்’ என்று அவர்கள் எச்சரித்தனர்.
The post பணமோசடி வழக்குகளில் பெண்களுக்கு ஜாமீன் சட்டத்தின் அடிப்படை விதிகள் தெரியவில்லையா?: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.