பணமோசடி வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் ஆஜர்

3 months ago 24

ஐதராபாத்,

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.20 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

61 வயதான அசாருதீனை கடந்த 3-ந்தேதியே ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், வேறு தேதியில் ஆஜராக அனுமதி அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 8-ந்தேதி ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இன்று ஐதராபாத் பதே மைதான் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அசாருதீன் நேரில் ஆஜராகியுள்ளார்.

Read Entire Article