![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39060020-seeeman.gif)
செய்யாறு,
செய்யாறு கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தநிலையில், இன்று முதன்முறையாக அந்த வழக்கில் சீமான் ஆஜரானார். பின்னர், கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ""கத்தரிக்காய் என்று தாளில் எழுதி பயனில்லை. நிலத்தில் இறங்கி விதைபோட்டு செடியாக்கி தண்ணீர்விட்டு விளைவிக்க வேண்டும். மேசையில் அமர்ந்துகொண்டு எழுதி பயனில்லை. சமீபகாலமாக தேர்தல் வியூகம் என்ற நோய் வந்துவிட்டது.
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும். தமிழ்நாட்டில் எத்தனை ஆறு, குளங்கள் இருக்கிறது என அவருக்குத் தெரியுமா?... எந்தப் பகுதியில் எந்தெந்த சமூகங்கள் இருக்கு என்று அவருக்குத் தெரியுமா?... தமிழ்நாட்டில் உள்ள பிரதான பிரச்சனைகளைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்?. பணக்கொழுப்பு இருப்பவர்களுக்குத் தான் இதுபோன்ற வியூகங்கள் எல்லாம் தேவைப்படும். அதைப் பற்றிப் பேசி காலத்தை வீணடிக்க வேண்டாம்..என்கிட்ட காசு இல்ல..மூளை இருக்கு " என்று சீமான் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காமராஜர், அண்ணா, ஓமந்தூரார் போன்றவர்களெல்லாம் வியூக வகுப்பாளர்களை வைத்துத் தான் அரசியல் செய்தார்களா?. தமிழ்நாட்டில் எதை செய்தால் எது சரியாக இருக்கும் என்பதைத் தெரியாமல் எப்படி அரசியலில் இருக்க முடியும்" என்று விஜய்யை சீமான் மறைமுகமாக சாடினார்.
தைப்பூசத்திற்கு முதல்-அமைச்சர் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத அவர், ஏன் முருகன் மாநாடு நடத்தினார். ஒருவேளை அவருக்கு வாக்கு இல்லைபோல" என்று சீமான் பதிலளித்தார்.