பண மோசடி, வெறுப்பு பேச்சு வழக்கு; இந்தியாவால் தேடப்படும் மத போதகருக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

3 months ago 22

இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்படும் நபரான மத போதகருக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பெரிய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்தார். இந்தியாவில் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஜாகிர் நாயக், பாகிஸ்தானில் சில நாட்கள் தங்கியிருந்து இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘இந்திய அரசால் முன்மொழியப்பட்ட வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த 2016ம் ஆண்டு முதல் மலேசியாவில் வசித்து வரும் ஜாகிர் நாயக்கை, நாடு கடத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் மலேசியா அரசு அதற்கு சம்மதிக்கவில்லை. கடந்த 2016ல் இந்தியாவை விட்டு வெளியேறிய ஜாகிர் நாயக் மீது பணமோசடி வழக்குகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பான வழக்குகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post பண மோசடி, வெறுப்பு பேச்சு வழக்கு; இந்தியாவால் தேடப்படும் மத போதகருக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article