பண மோசடி வழக்கில் நடவடிக்கை தாவூத் சகோதரர் வீட்டை பறிமுதல் செய்தது ஈடி

3 weeks ago 5

மும்பை: பணபரிவர்த்தனை மோசடி வழக்கில் தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்கரின் கூட்டாளியின் வீட்டை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மும்பை நிழல் உலக தாதாவாக விளங்கிய தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி வாழ்கிறான். அவன் மும்பையில் இருந்த போது தானேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ் தேவிசந்த் மேத்தாவிடமிருந்து தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் மற்றும் பலர் மிரட்டி பணம் பறித்ததாககுற்றச்சாட்டு எழுந்தது.

இக்பால் கஸ்கருடன், மும்தாஜ் ஷேக், இஸ்ரார் அலி ஜமீல் சையத் ஆகியோர் தானேயில் உள்ள ஒரு குடியிருப்பை மிரட்டி எழுதி வாங்கினார்கள். மேலும் ரூ. 10 லட்சத்திற்கான நான்கு காசோலைகளை வாங்கி பணமாக்கினார்கள். இதுதொடர்பாக 2017 செப்டம்பர் மாதம் தானே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் தாவூத் சகோதரர் இக்பால் கஸ்பர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பணபரிவர்த்தனை மோசடி சட்டத்தின் கீழ் இந்த வீட்டை கைப்பற்றுமாறு தீர்ப்பாயம் அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ரூ.55 லட்சம் மதிப்புள்ள தானே வீட்டை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

The post பண மோசடி வழக்கில் நடவடிக்கை தாவூத் சகோதரர் வீட்டை பறிமுதல் செய்தது ஈடி appeared first on Dinakaran.

Read Entire Article