புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது, அவரது மகனான கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது.
இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.இதை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஈடி தரப்பில் தெரிவிக்கப்பட் டதை தொடர்ந்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
The post பண மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு; விசாரணையை ஒத்திவைக்க கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் appeared first on Dinakaran.