பட்லர் அதிரடி.. டெல்லியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

4 weeks ago 9

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன்களும், அசுதோஷ் சர்மா 37 ரன்களும் அடித்தன்ர். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 204 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் கைகோர்த்த சாய் சுதர்சன் - பட்லர் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது. நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து பட்லருடன் ஷெர்பேன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி குஜராத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். டெல்லி அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பட்லர் அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த ரூதர்போர்டு 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. ஸ்டார்க் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட திவேட்டியா சிக்சருக்கு பறக்க விட்டார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

19.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 204 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. பட்லர் 97 ரன்களுடனும், திவேட்டியா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

Read Entire Article