பட்டியல் சமுதாய இளைஞரின் கையை வெட்டிய சம்பவம்; தொடர்புடையவர்களுக்கு தகுந்த தண்டனை: எல்.முருகன் வலியுறுத்தல்

1 week ago 3

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புல்லட் பைக் ஓட்டியதைச் சொல்லி, பட்டியல் சமுதாய இளைஞரின் கையை வெட்டியுள்ளது, ஒரு சாதிவெறி கொண்ட கும்பல். பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கையானது,
பொதுமக்களிடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்ற வகையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உகந்த நீதியும், இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று தர வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

The post பட்டியல் சமுதாய இளைஞரின் கையை வெட்டிய சம்பவம்; தொடர்புடையவர்களுக்கு தகுந்த தண்டனை: எல்.முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article