சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் வேலை வாய்ப்புக்கான திறன்களை வளர்த்து பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) ரூ.12,000/-, ரூ.15,000/- மற்றும் ரூ.25,000/- என மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படும். இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/adtw_t_90_ms_2024.pdf மற்றும் https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/adtw_t_5_ms_2025.pdf என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்போது, பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) வழங்க உயர்திறன் ஊக்கத் திட்டத்தினை 2024-2025-ஆம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பம் 30.01.2025-இலிருந்து விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர் https://ee.kobotoolbox.org/x/nMU1hMpq என்ற இணைப்பில் நேரடியாக 28.02.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேற்கண்ட விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து அவர்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, அறிவுறுத்துமாறு தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.