பட்டாபிராமில் ரூ.279 கோடியில் டைடல் பார்க் முதல்வர் நாளை திறந்து வைப்பு

1 month ago 4

சென்னை: பட்டாபிராமில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டன. தமிழகத்தில் 3வது டைடல் பார்க்கான இது 11 ஏக்கர் நிலப்பரப்பில் 5.50 லட்சம் சதுர அடியில் ரூ. 279 கோடி மதிப்பீட்டில் 21 தளங்களை கொண்ட ஒரே கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தோய்வு ஏற்பட்டது.

தற்போது பணிகள்முடிவடைந்துள்ளன. இதில் உணவுக் கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த டைடல் பார்க் கட்டடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post பட்டாபிராமில் ரூ.279 கோடியில் டைடல் பார்க் முதல்வர் நாளை திறந்து வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article