பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவனை கொன்ற ரவுடி - போலீசார் விசாரணை

3 months ago 12
சென்னையில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்டதாக தலைமறைவான சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர். ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷாம் என்ற சிறுவன், ஐஸ் ஹவுஸ் செல்லம்மாள் தோட்டம் பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்தபோது, அங்கு வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரவுடி முதலை கார்த்திக் பட்டாசு வெடிக்கக்கூடாது மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்த்து கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த ரவுடி கார்த்திக், கழுத்தில் ஓங்கி குத்தியதில் சிறுவன்ஷாம் சம்பவயிடத்திலேயே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article