விருதுநகர், அக்.24: விருதுநகர் அருகேயுள்ள ஆமத்தூரில் அனுமதியின்றி செட்டில் பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகே ஆமத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் கோகுல்குமார் என்பவரது பட்டாசுக் கடை அருகே செட்டில் கிப்ட் பாக்ஸ்களை அனுமதியின்றி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 89 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் கோகுல்குமாரை கைது செய்தனர்.
The post பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் பறிமுதல் appeared first on Dinakaran.