பட்டா இடத்தை மீட்டு தரக்கோரி பெட்ரோல் பாட்டிலுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

1 week ago 5

*தடுத்து நிறுத்தி விசாரணை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னன் மனைவி பழனியம்மாள்(50). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, பெண் போலீசார் மூலம் சோதனையிட்தில், 1 லிட்டர் பெட்ரோல் பாட்டிலை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதனை போலீசார் கைப்பற்றினர்.

விசாரணையில், பழனியம்மாளுக்கு தொட்டபடகாண்ட அள்ளியில் சொந்தமாக 3 சென்ட் அளவிற்கு இடம் உள்ளது. அந்த இடத்தில் வீடும் உள்ளது. அவரது பட்டா இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கழிவுநீர் கால்வாய் கட்ட முயன்றுள்ளனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இடத்தை மீட்டு தரக்கோரி, பெட்ரோல் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பட்டா இடத்தை மீட்டு தரக்கோரி பெட்ரோல் பாட்டிலுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண் appeared first on Dinakaran.

Read Entire Article