பட்டப்பகலில் பைக் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி

2 weeks ago 2

 

விழுப்புரம், ஜன. 18: விழுப்புரத்தில் பட்டப்பகலில் பைக் திருடிய வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே பானாம்பட்டைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் நேற்று தனது அலுவலகம் எதிரே பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரது பைக்கை திருடி கொண்டு சென்றனர். இதை பார்த்த விக்னேஷ் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை துரத்திசென்று பிடித்தனர்.

இரண்டு பேர் தப்பி ஓடியநிலையில் தொடர்ந்து ஒருவர் மட்டும் சிக்கினார். தர்மஅடி கொடுத்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் சென்னை ஆவடியை சேர்ந்த தேவா(22) என்பதும் தப்பி ஓடியவர்கள் சென்னையைச் சேர்ந்த யோகேஷ், சஞ்சய் என்பதும் தெரியவந்து. தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் தேவாவை கைதுசெய்தனர். மற்ற இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். தொடர்ந்து தேவாவிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

The post பட்டப்பகலில் பைக் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி appeared first on Dinakaran.

Read Entire Article