சென்னை: தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக் குழுக்கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
ஒன்றிய அரசு நிதி வழங்க மறுத்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதற்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். மேலும் இரு மொழிக் கொள்கையைத்தான் செயல்படுத்துவோம் என்று முதல்வர் அறிவித்ததற்கும் நன்றி. அரசுப் பள்ளிகளில் 1.30 லட்சம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்க காரணமாக இருந்த முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தி அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் துணைக்கருவிகள் போன்றவற்றை நன்கொடைகள் மூலம் திரட்ட வேண்டுகோள் விடுப்பது, மற்றும் சிறப்பு திட்டக் குழுக்களும், சிறப்பு செயலாக்க குழுக்களும் ஏற்படுத்தப்பட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பட்ஜெட்டில் கல்வி நிதி; முதல்வருக்கு பிடிஏ நன்றி appeared first on Dinakaran.