
ஐதராபாத்,
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சேகர் கம்முலா. இவரது இயக்கத்தில் தற்போது பான் இந்தியா அளவில் உருவாகி இருக்கும் படம் குபேரா. தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த ரெட் லாரி திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக சேகர் கம்முலா கலந்து கொண்டார். அதில், அவரின் பிளாக்பஸ்டர் படமான 'ஹேப்பி டேஸ்' திரையிடப்பட்டது. அதன்பிறகு உரையாற்றிய சேகர், குபேராவை உருவாக்கியதில் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார்.
அவர் கூறுகையில், 'குபேராவை உருவாக்கியதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அந்த கதைக்கு தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா போன்ற நட்சத்திரங்கள் தேவைப்பட்டன. படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
எனது திரைப்படங்கள் நல்ல கருத்துகளை சொல்லாமல் இருக்கலாம், ஆனால் அது நாட்டின் சமூக ஒற்றுமையை சேதப்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதை மனதில் வைத்துத்தான் படங்களை இயக்குவேன்' என்றார்.