படப்பிடிப்பின்போது பிரபல பாலிவுட் நடிகர் காயம்

5 months ago 34

சென்னை,

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி. இவர் 'ராஸ்' என்ற திகில் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'புட்பாத்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து, பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது இவர் 'கூடாச்சாரி 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அதில் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆக்சன் காட்சியில் நடித்தபோது, எதிர்பாராத விதமாக அவரது கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article