பஞ்சாயத்து நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியும் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்தில் கடை இயங்குவதாக குற்றச்சாட்டு

4 weeks ago 7


பந்தலூர்: அய்யன்கொல்லி பகுதியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியும் மீண்டும் கட்டிடம் பயன்பாட்டில் இருப்பதாகவும், கடை இயங்குவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யன்கொல்லி வனச்சரகம் குடியிருப்பு அருகில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வணிக நோக்கில் கடைகளை வாடகைக்கு விடுவதாக அட்டக்கடவு பகுதியை சேர்ந்த ரெஜி என்பவர் மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார், சேரங்கோடு ஊராட்சி தலைவர் ஆகியோருக்கு புகார் தெரிவித்திருந்தார்.

இப்புகாரை தொடர்ந்து சேரங்கோடு ஊராட்சி சார்பில் கட்டிட உரிமையாளர் சந்திரிகா என்பவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அந்த நோட்டீசில், அனுமதி இல்லாமல் கட்டிய கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் நோட்டீஸ் ஒட்டி இரண்டு நாட்களில் மீண்டும் சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வந்த பேக்கரி கடையை திறந்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பஞ்சாயத்து நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியும் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்தில் கடை இயங்குவதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article