இஸ்லாமாபாத் : பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரை குறிவைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணையை நடுவானில் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தியது. நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் பாகம் பஞ்சாப் மாநில எல்லையோரங்களில் ககண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 1.10 முதல் 1.20 மணிக்குள் பஞ்சாப்பை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியுள்ளது தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்தால் வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் பாகங்களில் சீன எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சீனாவிடம் இருந்து வாங்கிய P15E ஏவுகணையை இந்தியப் பகுதியை நோக்கி பாகிஸ்தான் ஏவியது அம்பலம் ஆகி உள்ளது.
இதனிடையே பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல் நடந்ததாக ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது. கோபால் நகர் மற்றும் நசீராபாத் சுற்றுப்புறங்களில் வெடிசப்தத்துடன் புகைமூட்டம் கிளம்பும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. வால்டன் விமான தளம் அருகே விழுந்து வெடித்தது டிரோன் என கூறப்படுகிறது. இதில் 4 ராணுவத்தினர் பலியாகி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் பாகிஸ்தானின் 9 நகரங்களை குறி வைத்து தற்கொலை படை டிரோன்கள் ஏவப்பட்டுள்ளன. லாகூர், குஜ்ரன்வாலா, சக்வல், பகவல்பூர், மியானோ, சோர், கராச்சி, ராவல்பிண்டி, அட்டோக் ஆகிய 9 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது 12 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
The post பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரை குறிவைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணையை நடுவானில் வீழ்த்தியது இந்தியா!! appeared first on Dinakaran.