பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு - டிரோன் பறிமுதல்

2 months ago 12

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு டிரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப் பகுதி அருகே உள்ள வயல்வெளிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, காலை 9.15 மணிக்கு தனோ குர்த் கிராமத்தின் அருகே உடைந்த நிலையில் கிடந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 10.20 மணிக்கு தானோ காலன் என்ற கிராம் அருகே, சுமார் 540 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் பாக்கெட் ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்தனர். எல்லை அருகே அடிக்கடி போதைப்பொருள் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இன்று போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.   

Read Entire Article